பூல்காரி (பூப்பின்னல்)
பூல்காரி (பூப்பின்னல்) (Phulkari) (பஞ்சாபி மொழி: ਫੁਲਕਾਰੀ) என்பது பஞ்சாப் பகுதி பின்னுவேலை நுட்பம் ஆகும். இதன் பொருள் பூவேலை என்பதாகும். இது இந்தியப் பஞ்சாபிலும் பாக்கித்தானியப் பஞ்சாபிலும் வழக்கில் உள்ளது. இது முதலில் பின்னல் வேலை அனைத்தையும் குறித்தாலும் இப்போது துப்பட்டாக்களையும் தலைக்கான கைக்குட்டைகளையும் மட்டும் பின்னும் வேலையைக் குறிக்கிறது.. அன்றாடப் பயனுக்காக, தளர்வாக எளிதாகப் பின்னப்படு ஒடினி (தலையணி), துப்பட்டா and மேலாடைகள் பூல்காரிகள் (பூவேலைகள்) எனப்படும். திருமணம், பிறந்த நாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கான உடலைப் போர்த்தும் ஆடைகளில் ஆடை முற்றிலும் விரவிய பூப்பின்னல் வேலை பாக் ("தோட்டம்") எனப்படும். ஆடையில் அங்கங்கு அமையும் சிதறிய பூவேலைகள் "ஆதா பாக்" (பகுதித் தோட்டம்) எனப்படும். இவை வெண்துணியில் வெள்ளை அல்லது மஞ்சட் பட்டு புரியால் பின்னப்படுகின்றன. இவை நடுவில் உள்ள கருமுகை ( "chashm-e-bulbul" ) (இது பூநடுவுள்ல பொலன் வட்டம் போன்றது) எனப்படும் நடுவட்டத்தில் தொடங்கி ஆடை முழுவதும் அல்லப்படும் அல்லது பின்னப்படும்.
சொற்பொருள்
[தொகு]பூல் என்றால் பூ என்று பொருள். காரி என்றால் கைவினை என்று பொருள். எனவே பூல்காரி என்றால் பூவேலை என்று பொருள்படும். இது பூப்பின்னல் வேலையிக் குறிப்பிடும்.
பருந்துப் பார்வை
[தொகு]பஞ்சாப் இவ்வகைப் பூல்காரி வேலைகட்குப் பெயர்போகியதாகும். இந்தப் பூவெளை கரட்டுக் கைநெசவுத் பருத்தித் துணியில் நார்ப்பட்டுப் புரிகொண்டு பின்னப்படுகிறது. பூல்காரிளில் பெரும்பாலும் வடிவியல் பாணி உருவங்களே பின்னப்படும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Shailaja D. Naik (1996). "9. Phulkari of Punjab". Traditional Embroideries Of India. APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170247314.
வெளி இணைப்புகள்
[தொகு]- PHULKARI - Ancient Textile of Punjab பரணிடப்பட்டது 2016-09-12 at the வந்தவழி இயந்திரம்
- Phulkari exhibition, Turin, 2016